மானியமில்லா சிலிண்டர் விலை ரூ.192 குறைப்பு - சென்னையில் ஒரு சிலிண்டர் விலை ரூ.569.50...
தமிழகத்தில் மே மாதத்திற்கான மானியமில்லாத வீட்டு சமையல் எரிவாயு விலை குறித்த அறிவிப்பு இன்று வெளியானது. இதன்படி, மானியமில்லாத ஒரு சிலிண்டர் விலை, 192 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. மானியமில்லா எரிவாயு சிலிண்டர் விலை ஒன்றுக்கு 569.50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டெல்லியில் 744 ரூபாயில் இருந்து 581.50 ரூபாயாக குறைந்துள்ளது. மும்பையில் 714.50 ரூபாயில் இருந்து 579 ரூபாய்க்கு மானியமில்லா எரிவாயு சிலிண்டர் விற்கப்படுகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சரிவடைந்ததையடுத்து, இந்த விலைக்குறைப்பு நடவடிக்கையை எண்ணெய் நிறுவனங்கள் எடுத்துள்ளன.
No comments:
Post a Comment