Writeoff என்பது வங்கி வரவுசெலவு கணக்கில் ஒரு cleaning process
ரிசர்வ் வங்கி 64000கோடி கடன் தள்ளுபடி என்று ஒரு செய்தி இன்று வந்திருக்கிறது.
இது விஷயமாக ஒய்வு பெற்ற வங்கி பணியாளர் என்ற முறையில் சில விளக்கங்கள் கூற விரும்புகிறேன்.
அதாவது writeoff என்பது வேறு waiver என்பது வேறு.
வங்கியில் ஒருவருக்கு 5லட்சம் கடன் கொடுக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த நபர் ஒழுங்காக தவணை வட்டி கட்டினால் அது standard asset அதாவது நல்ல கடனாளி.
அதே நபர் 3மாதம் வட்டி மற்றும் தவணை கட்ட தவறினால் அது substandard asset அதாவது அடிக்கடி வற்புறித்தினால் கட்ட கூடியவர். ஆனால் வங்கி இந்த வகை கடனாளி க்கு தனது balance sheet ல் provisioning 30சதவீதம் வைக்க வேண்டும்.
அதே நபர் 6மாதம் எதுவும் கட்டாமல் இருந்தால் doubtful asset ஆக மாறும். அதற்கு வங்கி 100சதவீதம் provisioning வைக்க வேண்டும்.
அதே நபர் ஒரு வருடம் கட்டவில்லை என்றால் அது loss asset ஆக மாறும்.
இதில் provisioning என்பது வங்கி தனது profit ல் இருந்து எடுத்து வைக்கும்.
இப்போது writeoff என்பது வங்கி தனது balance sheet ஐ clean பண்ணுவதற்காக provisioning பண்ணி வைத்திருந்த பணத்தை வைத்து கடனை அடைத்து விடும்.
இதைதான் ரிசர்வ் வங்கி சொல்லி இருக்கிறது.
இப்போது அந்த கடனாளி தப்பித்து விட்டதாக அர்த்தம் இல்லை.
வங்கி சட்ட நடவடிக்கைகளை doubtful asset க்கு வந்தவுடன் எடுக்க ஆரம்பித்து விடும்.
இப்போது தள்ளுபடி செய்ய பட்டவர்கள் சட்டத்தின் பிடியில் இருக்கிறார்கள். அந்த சட்ட நடவடிக்கை முடிந்தவுடன் அவர்கள் சொத்துக்களை பறிமுதல் செய்து அதை ஏலத்தில் விட்டு பணத்தை வங்கியின் லாப கணக்கில் சேர்த்து விடுவார்கள்.
ஆகையால் தள்ளுபடி ஆகிவிட்டது இனி அவர்கள் ஜாலியாக சுற்று வார்கள் என்று அர்த்தமில்லை.
ஏற்கனவே இந்த தள்ளுபடி நபர்கள் சொத்தெல்லாம் enforcement மற்றும் incometax டிபார்ட்மென்ட் மூலமாக attachmentசெய்ய பட்டிருக்கிறது.
Writeoff என்பது வங்கி வரவுசெலவு கணக்கில் ஒரு cleaning process.
சரி இப்போது waiver என்றால் என்ன? சென் ற பாராளுமன்ற தேர்தலில் ராகுல் நகை கடன் விவசாய கடன் அனைத்தும் தள்ளுபடி என்று கூறினார்களே அது எந்தprovisioning இல்லாமல் மொத்தமாக வங்கிகளை திவாலா க்கும் திட்டம்.
Writeoffஎன்பது வங்கிகளின் balancesheet ஐ clean செய்யும் வேலை ஆனால் கடனாளியை உதைத்து பிடுங்கும் வேலை நடக்கும்.
Waiver என்பது மொத்தமாக கோவிந்தா!
Writeoffக்கும் waiver க்குக்கும் இருக்கும் வித்தியாசத்தை என்னால் முடிந்த வரை எளிமையாக சொல்லி இருக்கிறேன்.
நன்றி.
Palvannan Ravindran அவர்களின் பதிவின் நகல்.
No comments:
Post a Comment