Total Pageviews

Thursday, 25 June 2020

Suggestion for India Government to earn Rs. One Crore Crore. Rs.10,00,00,00,00,00,000/- Suggestion to create Indian Government Rupee Crypto Currency.




Dear Sri Our Honourable Prime Minister Sri Narendra Modi Ji, Namasthe.

I am Financial Scientist.

Suggestion for India Government to earn Rs. One Crore Crore. Rs.10,00,00,00,00,00,000/-
Suggestion to create Indian Government Rupee Crypto Currency.

N.Sugavanam 9176244989 sugavanam.mobile@gmail.com

I request our Indian Government to create official Government Rupee Crypto Currency and it will promote our Indian Government financial value. More than one crore Indian Citizens are dealing with Crypto Currency business and all those Indian Citizen will purchase Indian Gov Rupee Crypto currency and other Indian Citizens will also purchase if it is issued by Indian Government.  Not only that,  all over the world, India now noted as Best Financial Services country and all the 777 crores in the world will purchase Indian Gov Rupee Crypto Currency IGRCC.  So, please introduce IGRCC and do not kill Crypto Currency business which is newly born Golden Egg Geese.  And very big money flow will happen towards India and it will increase Indian Rupee Value instantly.  I am financial scientist and I can dedicate and support Indian Government in this great service.  This will make Indian Government to get Rs. One Crore Crore (Rs.10,00,00,00,00,00,000/-) will come towards India and our Indian Rupee value will cross USD and EURO value.  Please implement this and make India No.1 Financial Country in the world... Jai Hind... Bharath Matha ki Jai...
https://supportnarendramodibjp.blogspot.com/2020/06/suggestion-for-india-government-to-earn.html
N.Sugavanam 9176244989 sugavanam.mobile@gmail.com 

Saturday, 30 May 2020

Letter from Our Honourable Prime Minister Sri Narendra Modi - Tamil Translation - மாண்புமிகு பிரதமரின் கடிதம்



Letter from Our Honourable Prime Minister Sri Narendra Modi - Tamil Translation 

https://supportnarendramodibjp.blogspot.com/2020/05/letter-from-our-honourable-prime.html

மாண்புமிகு பிரதமரின் கடிதம்
என் சக இந்தியர்களே,
கடந்த ஆண்டு இதே நாளில் இந்திய வரலாற்றில் பொன்னான ஓர் அத்தியாயம் தொடங்கியது. பல தசாப்தங்களுக்குப் பிறகு, இந்த நாட்டு மக்கள் அறுதிப் பெரும்பான்மை பலத்துடன் முழு ஆட்சிக் காலத்தை நிறைவு செய்த அரசுக்கு மீண்டும் வாக்களித்து வெற்றி பெறச் செய்திருந்தனர்.
இந்தியாவின் 130 கோடி மக்களுக்கும், நமது தேசத்தின் ஜனநாயக மாண்புகளுக்கும் மீண்டும் ஒரு முறை நான் தலை வணங்குகிறேன்.
சாதாரண நேரமாக இருந்திருந்தால், நான் உங்கள் மத்தியில் வந்திருப்பேன். இருந்தாலும், இப்போதைய சூழ்நிலைகள் அதற்கு அனுமதி தரவில்லை. அதனால் இந்தக் கடிதத்தின் மூலம் உங்களிடம் நான் ஆசி கோருகிறேன்.
உங்களுடைய பாசம், நல்லெண்ணம், தீவிர ஒத்துழைப்பு ஆகியவை புதிய சக்தி மற்றும் உத்வேகத்தைக் கொடுத்திருக்கிறது. ஜனநாயகத்தின் கூட்டு பலத்தை நீங்கள் வெளிப்படுத்தியுள்ள விதம், ஒட்டுமொத்த உலகிற்கும் வழிகாட்டும் விளக்காக அமைந்திருக்கிறது.
2014 ஆம் ஆண்டில் இந்த நாட்டு மக்கள் வலுவான மாற்றத்துக்காக வாக்களித்திருந்தனர். கடந்த ஐந்து ஆண்டுகளில், நிர்வாக அமைப்பு முறை தன்னுடைய லஞ்சமும், தவறான நிர்வாகமும் கொண்ட முறைகளில் இருந்து எப்படி மாறியுள்ளது என்பதை இந்த தேசம் பார்த்துள்ளது. `அந்த்யோதயா' என்ற உணர்வை நிரூபிக்கும் வகையில், கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
2014 முதல் 2019 வரையிலான காலத்தில் இந்தியாவின் பிரமிப்பான தோற்றம் கணிசமாக அதிகரித்துள்ளது. ஏழைகளின் கண்ணியம் மேம்பட்டிருக்கிறது. நிதி பங்கெடுப்பு, இலவச எரிவாயு மற்றும் மின் இணைப்புகள், முழுமையான கழிப்பறை வசதி, `அனைவருக்கும் வீடு' திட்டத்தை நோக்கிய பயணம் என சாதனைகள் நிகழ்த்தப்பட்டன.
சர்ஜிக்கல் தாக்குதல் மற்றும் வான்வழி தாக்குதல் மூலம் தன் வல்லமையை இந்தியா நிரூபித்துள்ளது. அதே சமயத்தில், ராணுவத்தில் ஒரே அந்தஸ்திலான பதவியில் இருந்து ஓய்வு பெற்ற அனைவருக்கும் ஒரே மாதிரியான ஓய்வூதியம் (OROP), நாடு முழுக்க ஒரே மாதிரியான வரித் திட்டம் - ஜி.எஸ்.டி., விவசாயிகளுக்கு அதிக அளவிலான குறைந்தபட்சக் கொள்முதல் விலை போன்ற பல தசாப்தங்களாக நிலுவையில் இருந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.
இந்த ஆட்சி தொடர வேண்டும் என்பதற்காக மட்டுமின்றி, இந்தியாவை புதிய உச்சங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவை நிறைவேற்றுவதற்காகவும் 2019இல் இந்திய மக்கள் வாக்களித்துள்ளனர். இந்தியாவை உலக அளவில் முன்னோடி நாடாக ஆக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். கடந்த ஓராண்டு காலத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், இந்தக் கனவை நிறைவேற்றும் பாதையை நோக்கியவையாக உள்ளன.
இன்றைக்கு, நாட்டின் வளர்ச்சிப் பாதையில் தாங்களும் உள்ளடங்கி இருப்பதாக 130 கோடி மக்களும் கருதுகிறார்கள். `ஜன் சக்தி' மற்றும் `ராஷ்ட்ரா சக்தி'யின் வெளிச்சம் ஒட்டுமொத்த தேசத்திற்கும் ஒளியூட்டியுள்ளது. `சப்காசாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ்' என்ற மந்திரத்தின் மூலமாக அனைத்துத் துறைகளிலும் இந்தியா முன்னேறிக் கொண்டிருக்கிறது.
என் சக இந்தியர்களே,
கடந்த ஓராண்டாக பல முடிவுகள் பற்றி பரவலாக விவாதிக்கப்பட்டு, மக்கள் மத்தியில் இடம் பிடித்துள்ளன.
அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு தேசத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டு உணர்வை பலப்படுத்தியுள்ளது. மாண்புக்குரிய உச்சநீதிமன்றம் ஒரு மனதாக அளித்த ராமர் கோவில் தீர்ப்பு, பல நூற்றாண்டுகளாக நிலவி வந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அமைந்துள்ளது. பழமை எண்ணம் கொண்ட முத்தலாக் நடைமுறை வரலாற்றின் குப்பைத் தொட்டியில் போடப்பட்டு விட்டது. குடிமக்கள் சட்டத்தில் செய்துள்ள திருத்தம், இந்தியாவின் பரிவு மற்றும் பங்கேற்பு நிலை அளிக்கும் தன்மையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
ஆனால் தேசத்தின் வளர்ச்சிப் பாதைக்கு உந்துதல் தரக்கூடிய இன்னும் பல முடிவுகளும் இருக்கின்றன.
நீண்டகாலமாக நிலுவையில் இருந்து வந்த முப்படைகளின் தலைமைத் தளபதி பதவி உருவாக்கப்பட்டதன் மூலம், ராணுவத்தின் பிரிவுகளுக்கு இடையில் ஒருங்கிணைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. அதே சமயத்தில், மிஷன் கங்கன்யானுக்கு ஆயத்தப் பணிகளை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது.
ஏழைகள், விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு அதிகாரம் கிடைக்கச் செய்வது நமது உயர் முன்னுரிமையாக இருக்கிறது.
பிரதமரின் கிசான் சம்மான் நிதியில் அனைத்து விவசாயிகளும் சேர்க்கப் பட்டுள்ளனர். ஓராண்டு காலத்திற்குள் 9 கோடியே 50 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகளின் கணக்குகளில் ரூ.72 ஆயிரம் கோடி செலுத்தப் பட்டுள்ளது.
ஜல் ஜீவன் மிஷன் மூலமாக, கிராமப்புறங்களில் உள்ள 15 கோடிக்கும் அதிகமான வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் கிடைப்பது உறுதி செய்யப்படும்.
50 கோடிக்கும் மேற்பட்ட கால்நடைகளின் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு, இலவசமாகத் தடுப்பூசி போடுவதற்கான பெரிய அளவிலான முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக, விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், சிறிய கடை வைத்திருப்பவர்கள், அமைப்புசாரா துறையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 60 வயதுக்குப் பிறகு மாதம் ரூ.3000 ஓய்வூதியம் கிடைக்க உத்தரவாதம் அளிக்கப் பட்டுள்ளது.
மீனவர்கள் வங்கிக் கடன்கள் பெறுவதுடன், அவர்களுக்காக தனியாக ஒரு துறை உருவாக்கப் பட்டுள்ளது. மீன்வளத் துறையை பலப்படுத்த வேறு பல முடிவுகளும் எடுக்கப் பட்டுள்ளன. இவை நீலப் பொருளாதாரத்துக்கு உத்வேகம் அளிப்பவையாக இருக்கும்.
அதேபோல வர்த்தகர்களின் பிரச்சினைகளுக்கு உரிய காலத்தில் தீர்வு காண்பதற்காக வியாபாரி கல்யாண் வாரியம் என்ற அமைப்பை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சுய உதவிக் குழுக்களுடன் இணைந்துள்ள 7 கோடி பெண்களுக்கு அதிக அளவிலான தொகை கடனாக அளிக்கப் படுகிறது. ஜாமீன் எதுவும் இல்லாமல் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கும் கடன் வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து சமீபத்தில் ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டது.
மலைவாழ் மக்களின் பிள்ளைகளின் கல்வியை மனதில் கொண்டு, 400க்கும் மேற்பட்ட புதிய ஏகலைவா மாடல் இருப்பிடப் பள்ளிகளை உருவாக்கும் பணியை நாங்கள் தொடங்கி இருக்கிறோம்.
கடந்த ஆண்டில் மக்களுக்கு உதவிகரமான பல சட்டங்கள் உருவாக்கப் பட்டுள்ளன. நாடாளுமன்ற நேரத்தை ஆக்கபூர்வமாக பயன்படுத்துவதில், இப்போது சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டமாக இருந்தாலும், சீட்டு நிதிச் சட்டமாக அல்லது பெண்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குப் பாதுகாப்பு அளிக்கும் சட்டங்களாக இருந்தாலும், நாடாளுமன்றத்தில் அவை விரைந்து நிறைவேற்றப் பட்டுள்ளன.
இந்த அரசின் கொள்கைகள் மற்றும் முடிவுகள் காரணமாக, கிராமப்புறப் பகுதிகளுக்கும் - நகர்ப்புறப்பகுதிகளுக்கும் இடையிலான இடைவெளி குறைந்து கொண்டே வருகிறது. முதன்முறையாக நகர்ப்புறங்களைவிட கிராமப்புறங்களில் இன்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 10 சதவீதம் அதிகரித்துள்ளது.
தேசத்தின் நலன் கருதி மேற்கொள்ளப்பட்ட, இதுபோன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செயல்பாடுகள் மற்றும் முடிவுகளின் பட்டியல் இந்தக் கடிதத்தில் எழுத முடியாத அளவுக்கு நீளமானதாக இருக்கும். ஆனால், இந்த ஓராண்டு காலத்தில் ஒவ்வொரு நாளும் என்னுடைய அரசு 24 மணி நேரமும் முழு வேகத்துடன் உழைத்து, இந்த முடிவுகளை முன்னெடுத்துச் சென்று அமல்படுத்தியுள்ளது என்பதை நான் கூறியே ஆக வேண்டும்.
என் சக இந்தியர்களே,
நமது நாட்டு மக்களின் நம்பிக்கைகளையும், உயர் லட்சியங்களையும் நிறைவேற்றுவதை நோக்கி நாம் வேகமாக முன்னேறி வரும் வேளையில், உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் நம் நாட்டையும் பீடித்துள்ளது.
வல்லமை மிகுந்த, பொருளாதார பலம் மிக்க, சுகாதாரத் துறையில் அதிநவீன வசதிகளைக் கொண்ட நாடுகள் ஒருபுறமும், அதிக மக்கள் தொகையும், குறைவான வசதிகளையும் கொண்ட நாடுகள் மறுபுறமும் இதைச் சமாளித்து வருகின்றன.
இந்தியாவில் கொரோனா பரவும் போது, உலகிற்கு ஒரு பிரச்சினையாக இந்தியா மாறும் என்று பலரும் அச்சப்பட்டார்கள். ஆனால் இப்போது, நம்பிக்கை மற்றும் தாங்கிக் கொள்ளும் தன்மை ஆகியவற்றின் காரணமாக, உலகம் நம்மைக் காணும் பார்வையை நீங்கள் மாற்றிவிட்டீர்கள். உலகின் வல்லமையான, வளமை மிகுந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவின் கூட்டு பலத்திற்கும், செயல் திறனுக்கும் இணை ஏதும் இல்லை என்பதை நீங்கள் நிரூபித்திருக்கிறீர்கள். விளக்கு ஏற்றுதல், கை தட்டுதல் தொடங்கி, கொரோனாவை எதிர்த்துப் போராடுபவர்களைப் கௌரவிக்க இந்திய ராணுவத்தினர் நடத்திய நிகழ்ச்சிகள், மக்கள் ஊரடங்கு அல்லது தேசிய அளவிலான முடக்கநிலை காலத்தில் விதிமுறைகளை உறுதியாகக் கடைபிடிப்பது என ஒவ்வொரு சூழ்நிலையிலும் நீங்கள் ஒரே பாரதம் என்பதை வெளிப்படுத்தியிருப்பது தான் ‘ஷ்ரேஷ்டா பாரத்தை’ (உன்னத பாரதம்) எட்டுவதற்கான உத்தரவாதமாக உள்ளது.
இதுபோன்ற பெரிய நெருக்கடியில், யாருக்கும் எந்த அசௌகரியமும் ஏற்படவில்லை என்று நிச்சயமாக சொல்ல முடியாது தான். நமது தொழிலாளர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், கைவினைஞர்கள், கைத்தொழில் செய்பவர்கள், சிறு தொழில் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள், சாலையோர வியாபாரிகள் மற்றும் அவர்களைப் போன்றவர்களுக்கு எண்ணற்ற துன்பங்கள் நிகழ்ந்திருக்கின்றன. நமது பிரச்சினைகளை அகற்றுவதற்காக, நாம் ஒன்றுபட்டு உறுதியுடன் செயல்பட்டு வருகிறோம்.
இருந்தபோதிலும், இப்போது நாம் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் பேரழிவாக மாறிவிடாமல் இருப்பதை உறுதி செய்வதில் நாம் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே, அனைத்து விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களையும் ஒவ்வொரு இந்தியரும் பின்பற்ற வேண்டியது மிகவும் முக்கியம். நாம் இதுவரையில் பொறுமையைக் கடைபிடித்து வருகிறோம், அது அப்படியே தொடர வேண்டும். இந்தியா பாதுகாப்பாக இருப்பதற்கும், மற்ற நாடுகளைவிட நல்ல நிலையில் இருப்பதற்கும் இதுதான் காரணம். இது நீண்ட போராட்டம். ஆனால், நாம் வெற்றியின் பாதையில் செல்லத் தொடங்கியுள்ளோம். வெற்றி என்பது தான் நமது கூட்டு தீர்மானமாக இருக்கிறது.
கடந்த சில தினங்களில், மேற்குவங்கம் மற்றும் ஒடிசாவின் சில பகுதிகளில் சூறாவளி புயல் புரட்டிப் போட்டுள்ளது. இப்போதும் கூட, அந்த மாநிலங்களைச் சேர்ந்த மக்களின் தாங்கும் திறமை குறிப்பிடத்தக்கதாக உள்ளது. அவர்களுடைய மன உறுதி நாட்டு மக்களுக்கு உத்வேகம் அளிப்பதாக உள்ளது.
அன்பு நண்பர்களே,
இந்த சமயத்தில், இந்தியா உள்ளிட்ட, பல்வேறு நாடுகளின் பொருளாதாரங்கள் எப்படி மீட்சி பெறும் என்ற விவாதம் பரவலாக நடைபெற்று வருகிறது. இருந்தபோதிலும், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிராக தனது ஒற்றுமை மற்றும் உறுதியை வெளிப்படுத்தி உலகிற்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியதைப் போல, பொருளாதார மீட்டுருவாக்கத்திலும் நாம் முன்னுதாரணத்தை ஏற்படுத்துவோம் என்ற உறுதியான நம்பிக்கை இருக்கிறது. பொருளாதார விஷயத்தைப் பொருத்த வரையில், 130 கோடி இந்தியர்களும் தங்களுடைய பலத்தின் மூலம், உலகை ஆச்சர்யத்தில் ஆழ்த்துவதுடன், உத்வேகம் அளிப்பவர்களாகவும் இருப்பார்கள்.
நாம் தற்சார்பாக மாற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. நமது சொந்தத் திறன்களின் அடிப்படையில், நமது பாதையில் நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அதைச் செய்வதற்கு தற்சார்பு இந்தியா என்ற ஒரே வழிதான் இருக்கிறது.
தற்சார்பு இந்தியா திட்டத்துக்காக சமீபத்தில் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களின் தொகுப்பு, இந்த இலக்கை நோக்கிய பயணத்தின் முக்கியமான நடவடிக்கை ஆகும்.
இந்த முன்முயற்சி ஒவ்வொரு இந்தியருக்கும் வாய்ப்புகள் கிடைக்கும் புதிய காலக்கட்டத்தை உருவாக்கும். விவசாயிகள், தொழிலாளர்கள், சிறுதொழில் முனைவோர், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் இணைந்த இளைஞர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் புதிய வாய்ப்புகளைத் தரும் காலகட்டமாக இருக்கும்.
வியர்வை, கடின உழைப்பு, நமது தொழிலாளர்களின் திறமையுடன் கூடிய இந்திய மண், இறக்குமதிகளை சார்ந்திருக்கும் நிலையைக் குறைக்கும் வகையிலான உற்பத்திகளை அதிகரிக்கச் செய்து, தற்சார்பை நோக்கி பயணம் செய்வதாக இருக்கும்.
அன்பு நண்பர்களே,
கடந்த ஆறு ஆண்டு கால பயணத்தில், என் மீது நீங்கள் அன்பு காட்டி, ஆசிகள் வழங்கி வருகிறீர்கள்.
உங்கள் ஆசிகளால் கிடைத்த பலத்தால் தான் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகளை எடுத்து, கடந்த ஓராண்டு காலத்தில் வேகமாக முன்னேறிச் செல்ல முடிந்துள்ளது. இருந்தபோதிலும், இன்னும் நிறைய விஷயங்களைச் செய்ய வேண்டியுள்ளது. நமது நாடு எதிர்கொண்டுள்ள பல சவால்களும், பிரச்சினைகளும் உள்ளன. நான் இரவு பகலாக பணியாற்றி வருகிறேன். என்னிடம் குறைபாடுகள் இருக்கலாம். ஆனால் நமது நாட்டுக்கு எந்தக் குறையும் இருக்காது. எனவே, என் மீது நான் கொண்டிருக்கும் நம்பிக்கையைவிட, உங்களை, உங்கள் பலத்தை, உங்கள் திறன்களை நான் அதிகமாக நம்பி இருக்கிறேன்.
என்னுடைய உறுதியான நிலைப்பாடுகளுக்கு நீங்களும், உங்கள் ஆதரவும், ஆசிகளும், பாசமும் தான் பலமாக இருக்கின்றன.
உலக அளவில் நோய்த் தொற்று பரவும் இது நிச்சயமாக ஒரு நெருக்கடியான காலக்கட்டம் தான். ஆனால் இந்தியர்களான நமக்கு இதுவும் கூட உறுதியான முடிவுக்கான காலமாக அமைந்துள்ளது.
130 கோடி மக்களின் தற்போதைய நிலையும், எதிர்காலமும் எதிர்மறை விஷயங்களால் ஒருபோதும் பாதிக்கப்பட்டு விடாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
நமது தற்போதைய நிலை மற்றும் எதிர்காலத்தை நாமே முடிவு செய்வோம்.
முன்னேற்றத்தின் பாதையில் நாம் முன்னேறிச் செல்வோம், வெற்றி நமதாக இருக்கும்.
कृतम्मेदक्षिणेहस्ते, जयोमेसव्यआहितः என்று சொல்லப்படுகிறது.
ஒருபுறம் நாம் கடமை மற்றும் செயல்பாட்டில் ஈடுபாடு காட்டினால், மறுபுறம் நமக்கு வெற்றி உறுதி செய்யப்பட்டிருக்கும் என்பது இதன் அர்த்தம்.
.
நாட்டின் வெற்றிக்கான பிரார்த்தனைகளுடன், நான் மீண்டும் ஒரு முறை உங்களிடம் தலை வணங்குகிறேன்.
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆரோக்கியமாக இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்!!!
விழிப்பாக இருங்கள், விஷயங்களை அறிந்தவர்களாக இருங்கள்!!!
உங்களின் பிரதான சேவகன்
நரேந்திர மோடி
Jai Hind...

Sunday, 10 May 2020

Write to PM Prime Minister - Suggestion to Introduce Drinking Licence to Liquor Drinkers all over India



Write to PM Prime Minister - Suggestion to Introduce Drinking Licence to Liquor Drinkers all over India

https://supportnarendramodibjp.blogspot.com/2020/05/suggestion-to-introduce-drinking.html

Now lot of men and some women become drunkards in Tamil Nadu and other states.

Drunkards after drinking, become very cruel and beat women and children.

And in Tamil Nadu, 50 Lakh men died early because of drinking and it made lot of cultural destruction, cruelty to women, and more raping in which many rapes are not even coming in records. 

To reduce all these social hazards, please introduce licensing for drinking. Licence applying men or women should have more than 18 years and should have job to earn money.  If he is not earning, drinkling licence should not be issued.

And all the social benefits like all free schemes to the drinking licenced men and women should be stopped.

Every year Drinking license to be renewed and every year they should prove their income earnings to get licence. No free scheme to drinking license holders.  There should be only fixed quota of liquor to be given to every drinking licence holder.

Every year Doctor Medical certificate should be brought to get drinking license.  Drinking license fees will be one of good income to government



Sunday, 3 May 2020

Corona Virus -- COVID-19 - சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோ எல்லா மருந்துகளுமே உங்கள் உடலின் எதிர்ப்பு சக்தியை கூட்டும் சித்தாந்தமே



Corona Virus - மலேரியா, டெங்கு Virus போல இதுவும் ஒரு Virus அவ்வளவுதான்

Corona குறித்து நாம் எல்லோருமே மிகவும் பயந்தும் குழம்பியும் இருக்கிறோம்.

வந்தால் கதை முடிந்ததோ என்ற அச்சம்.

சென்னையில் தாக்கம் அதிகம்.

நண்பரின் மகள் ஒருவர் சென்னையில் டாக்டர்.பணியில் இருக்கிறார்.
அவருடைய மாப்பிள்ளையும் டாக்டர் .

அவர்களுடன் போனில் பேசும் சந்தர்ப்பம் நண்பர் மூலம்  கிடைத்தது.

நலம் விசாரித்து விட்டு, இருவருமே சென்னையில் இருக்கிறீர்கள். பத்திரம் என்றேன்.

Uncle, உங்களை மட்டுமல்ல,
எல்லோரையுமே இந்த media பசங்க
ரொம்ப பயப்படுத்தியிருக்காங்க.

வந்தால் அவ்வளவுதான் என்று Brain wash செய்கிறார்கள். அவர்களுக்கும் இதை விட்டால் இப்போது வேறு செய்தி இல்லை.கற்பனைத் திறனோடு கண் காது மூக்கு வைத்து உங்களை அலறவைத்துக் கொண்டிருக்கிறார்கள்... என்று நண்பரின் மகள் கூறினார்.

என்ன சொல்ல வர்றே தாயி? என்றேன்.

மலேரியா, டெங்கு Virus போல இதுவும் ஒரு Virus அவ்வளவுதான்.

இப்ப நான் இருப்பது Corona patients உள்ள Wardல்தான்.

16 பேர் இருந்தார்கள். 9 பேர் குணமாகி வீட்டுக்கு போய் விட்டார்கள். இன்னும் 7 பேர் அவர்களும் சீக்கிரம் குணமாகி விடுவார்கள்... என்றார்.

மருந்தே இல்லை. எப்படி குணப்படுத்துகிறீர்கள்?

Simple uncle. Paracematol  tablets and Hydroxy Chloraquine மலேரியா tablets. கூடவே நல்ல சத்தான ஆகாரம்.

இரு வேளை Chicken soup, Egg, தக்காளி சூப், உடல் நிலைக்கு தக்கவாறு நல்ல சத்தான திட உணவு , நல்ல ஓய்வு அவ்வளவுதான்.

அவ்வளவுதானா?ஆச்சரியமாக இருக்கிறதே... என்றேன்.

உடலில் எதிர்ப்பு சக்தியை கூட்டி, உடலுக்கு ஓய்வு கொடுத்தாலே பெரும்பாலும் குணமடைந்து விடுவார்கள்.கூட சில மருந்துகள் அவ்வளவுதான்.

ஆனால் நிறைய பேர் இறக்கிறார்களே?

அங்குதான் Mediaகாரர்கள் உண்மையைFlash செய்யாமல் விட்டு விடுகிறார்கள்.

பெரும்பாலும் இறப்பவர்கள் ஏற்கனவே வேறு major Complaint இருக்கும் வயதானவர்கள், உடலில் immunity இல்லாதவர்கள்தான்.
Coronaவால் மட்டும் இறப்பவர்கள் low pereentage.Immunity இருப்பவர்கள் எளிதில் குணமடைந்து விடுகிறார்கள். உங்கள் ஈரோட்டிலேயே 70 பேரில் 69 பேர் குணமாகி விட்டார்கள். ஒரே ஒரு வயதானவர் மட்டும் தான் இறந்து விட்டார்.

எல்லோருக்கும் எளிதாக பரவுகிறது என்றுதானே Lockdown செய்திருக்கிறார்கள்... என்றேன்.

இந்த Virus மட்டும் இல்லை.
எல்லா Virusம் பரவக்கூடியதுதான். வித்தியாசமாக இருப்பதால்
இதை மிகைப்படுத்துகிறார்கள்.

பின்புலத்தில் பெரிய Politicsக்கும் இருக்கிறது. இந்த அரசியல்வாதிகளே ஒருவர் மீது ஒருவர் குறை கூறி கொண்டே இதை எளிதாக ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த வேண்டியதை பூதகரமாக மாற்றி விட்டார்கள்.

சொல்வதை பார்த்தால் பெரிதாக பயப்படத் தேவை இல்லை போல... என்றேன்.

Yes uncle.சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோ எல்லா மருந்துகளுமே உங்கள் உடலின் எதிர்ப்பு சக்தியை கூட்டும் சித்தாந்தமே. Simple. கூடவே Hygenic ஆக இருந்தால் நோய் தொற்று சீக்கிரம் வராது. வந்தாலும் சரி பண்ணிடலாம்.

ரொம்ப பயப்படாதீங்க. Relaxஆக இருங்க. சீக்கிரம் கட்டுப்படுத்திடுவாங்க. சரியான மருந்தும் வந்துவிடும். Dont worry Uncle.

ரொம்ப நாளைக்கப்புறம்
ஒரு Positive message.🌹

Writeoff என்பது வங்கி வரவுசெலவு கணக்கில் ஒரு cleaning process.





Writeoff என்பது வங்கி வரவுசெலவு கணக்கில் ஒரு cleaning process

ரிசர்வ் வங்கி 64000கோடி கடன் தள்ளுபடி என்று ஒரு செய்தி இன்று வந்திருக்கிறது.
இது விஷயமாக ஒய்வு பெற்ற வங்கி பணியாளர் என்ற முறையில் சில விளக்கங்கள் கூற விரும்புகிறேன்.

அதாவது writeoff என்பது வேறு waiver என்பது வேறு.

வங்கியில் ஒருவருக்கு 5லட்சம் கடன் கொடுக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த நபர் ஒழுங்காக தவணை வட்டி கட்டினால் அது standard asset  அதாவது நல்ல கடனாளி.

அதே நபர் 3மாதம் வட்டி மற்றும் தவணை கட்ட தவறினால் அது substandard asset அதாவது அடிக்கடி வற்புறித்தினால் கட்ட கூடியவர். ஆனால் வங்கி இந்த வகை கடனாளி க்கு தனது balance sheet ல்  provisioning 30சதவீதம் வைக்க வேண்டும்.

அதே நபர் 6மாதம் எதுவும் கட்டாமல் இருந்தால் doubtful asset ஆக மாறும். அதற்கு வங்கி 100சதவீதம் provisioning வைக்க வேண்டும்.

அதே நபர் ஒரு வருடம் கட்டவில்லை என்றால் அது loss asset ஆக மாறும்.

இதில்  provisioning என்பது வங்கி தனது profit ல் இருந்து எடுத்து வைக்கும்.

இப்போது writeoff என்பது வங்கி தனது  balance sheet ஐ clean பண்ணுவதற்காக provisioning பண்ணி வைத்திருந்த பணத்தை வைத்து கடனை அடைத்து விடும்.

இதைதான் ரிசர்வ் வங்கி சொல்லி இருக்கிறது.

இப்போது அந்த கடனாளி தப்பித்து விட்டதாக அர்த்தம் இல்லை.

வங்கி சட்ட நடவடிக்கைகளை doubtful asset க்கு வந்தவுடன் எடுக்க ஆரம்பித்து விடும்.

இப்போது தள்ளுபடி செய்ய பட்டவர்கள் சட்டத்தின் பிடியில் இருக்கிறார்கள். அந்த சட்ட நடவடிக்கை முடிந்தவுடன் அவர்கள் சொத்துக்களை பறிமுதல் செய்து அதை ஏலத்தில் விட்டு பணத்தை வங்கியின் லாப கணக்கில் சேர்த்து விடுவார்கள்.

ஆகையால் தள்ளுபடி ஆகிவிட்டது இனி அவர்கள் ஜாலியாக சுற்று வார்கள் என்று அர்த்தமில்லை.

ஏற்கனவே இந்த தள்ளுபடி நபர்கள் சொத்தெல்லாம் enforcement மற்றும் incometax டிபார்ட்மென்ட் மூலமாக attachmentசெய்ய பட்டிருக்கிறது.

Writeoff என்பது வங்கி வரவுசெலவு கணக்கில் ஒரு cleaning process.

சரி இப்போது  waiver என்றால் என்ன? சென் ற பாராளுமன்ற தேர்தலில் ராகுல்  நகை கடன் விவசாய கடன் அனைத்தும் தள்ளுபடி என்று கூறினார்களே அது எந்தprovisioning இல்லாமல் மொத்தமாக வங்கிகளை திவாலா க்கும் திட்டம்.

Writeoffஎன்பது வங்கிகளின் balancesheet ஐ clean செய்யும் வேலை ஆனால் கடனாளியை உதைத்து பிடுங்கும் வேலை நடக்கும்.

Waiver என்பது மொத்தமாக கோவிந்தா!

 Writeoffக்கும் waiver க்குக்கும் இருக்கும் வித்தியாசத்தை என்னால் முடிந்த வரை எளிமையாக சொல்லி இருக்கிறேன்.

நன்றி.
 Palvannan Ravindran அவர்களின் பதிவின் நகல்.

வங்கிகள் திவாலாகாமல் காப்பாற்றிய பெருமை மோடி அரசையே சாரும் ...




வங்கிகள் திவாலாகாமல் காப்பாற்றிய பெருமை மோடி அரசையே   சாரும் ...

வாராக்கடன்-சில உண்மைகள்:

https://supportnarendramodibjp.blogspot.com/2020/05/blog-post.html

பிரதமர் மோடி 2015 ல் வங்கி மேலாளர்கள் கூட்டத்தில் எதற்க்காக
நிதி கோருகிறீர்கள் என கேட்கிறார்

வங்கிகள் திவாலாகும் சூழ்னிலையில் உள்ளது என வங்கி
அதிகாரிகள் கூறுகிறார்கள்

இல்லையே உங்கள் கணக்கு அப்படி காட்டவில்லையே,
வாராக்கடன்  மூலதனத்திற்க்கும் கடனுக்கும் உள்ள விகிதம்
குறைவாகத்தானே இருக்கிறது என பிரதமர் கேட்கிறார்

வங்கி தலைமை நிர்வாகிகள் மவுனம்

ஒரு அதிகாரி எழுந்து உண்மையை சொல்கிறார்

ஐயா,
வங்கிகளின் வாராக்கடனை அதிகம் காண்பிக்காமல்
இருக்க முந்தைய அரசாங்க உத்தரவு அதனால் நாங்கள்
ஒவ்வொரு ஆண்டும் கடனையும் முடித்து வட்டியுடன்
சேர்த்து புதிய கடனாக அந்தாண்டுக் கணக்கில்
காண்பித்துக் கொள்கிறோம் அதனால் அந்த வாராக்கடன்
விகிதாச்சாரம் குறைந்துள்ளது என்று கூறுகிறார்

பிரதமர் அதிர்ந்து போகிறார்

ரிசர்வ் வங்கி என்ன நடவடிக்கை எடுத்தது ஏன்  கணக்குகளை
இப்படி குறைவாக காட்ட வேண்டும் என பிரதமர் கேட்கிறார்.

அதிகாரிகள் மவுனம்.

அதன் பின்னர் ரகுராம் ராஜன் வங்கிகளுக்கு சுற்றரிக்கை
அனுப்புகிறார் உண்மையான கடன் விபரங்களை மறைக்காமல்
காட்ட வேண்டும் என்கிறார்.இல்லையென்றால் நடவடிக்கை
எடுக்கப்படும் என எச்சரிக்கிறார்.அதுவரை ரகுராம் ராஜன் வாய்மூடி
மவுனம் காத்தது ஏன்? இதனாலேயே தான் அவர் தானாக பதவி
விலகினார் என்பதே உண்மை!

https://economictimes.indiatimes.com/news/economy/
policy/raghuram-rajan-warns-of-action-against-banks-
hiding-true-npa-numbers/articleshow/48348970.cms

அதன் பின் வங்கிகள் உண்மையான கணக்குகளை காண்பிக்கிறது.
வாராக்கடனின் முழு விபரம் கணக்கில் காட்டப்படுகிறது
அதனால் அந்த வாராக்கடன் சதவிகிதம் அதிகமாகிறது.

இதை வைத்துக் கொண்டு மோடி ஆட்சியில் வாராக்கடன்
அதிகம் என காங்கிரஸ் தான் செய்த தவறை மூடி மறைத்து
பொய்பிரச்சாரம் செய்தது

இதை வசூலிக்க மோடி அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து
கார்ப்பரேட்டுக்களை நிர்பந்திக்கிறது.கார்ப்பரேட்டுகள் தங்கள்
சொத்துக்களை விற்கும் நிலை வருகிறது பிறகு கார்ப்பரேட்டுகள்
கொஞ்சம் கொஞ்சமாக கடனை கட்டுகிறது

https://m.economictimes.com/news/company/corporate-
trends/the-great-indian-corporate-asset-sale-is-on-but-why-
are-buyers-not-queuing-up/articleshow/52706191.cms

https://www.thehindu.com/business/Industry/the-biggest-
ever-fire-sale-of-indian-corporate-assets-has-begun-to-tide-
over-bad-loans-crisis/article14310208.ece

https://www.business-standard.com/article/companies/steel-
companies-sell-assets-recast-loans-to-cut-spiralling-
debt-115070300118_1.html

https://www.bloombergquint.com/business/anil-ambani-groups-
debt-to-fall-60-after-asset-sales

இனி பணத்தை கட்டாமல் விட மாட்டார்கள் என்ற தகவல் மல்லையா
போன்ற முதலாளிகளுக்கு வங்கி அதிகாரிகள் மூலம் தகவல் போகிறது
இதையறிந்த மல்லையா வெளிநாடு தப்பிக்கிறார் மீண்டும் மோடி
தப்பிக்க விட்டார் என்ற பொய் பிரச்சாரம்

மல்லையா போன்ற கார்ப்பரேட்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் எந்த
நடவடிக்கையும் எடுக்காததால் கடன் வாங்கி பல ஆண்டுகள்
கட்டாமல் இந்தியாவிலியே சவுகரியமாக பாதுகாப்பாக இருந்தார்கள்.
ஆனால் மோடி ஆட்சியில் நிலைமை வேறு

மோடி இவர்களுக்கு சலுகை தருகிறார் என்றால் ஏன் வெளிநாட்டுக்கு ஓட
வேண்டும் இந்தியாவிலேயே பாதுகாப்பு கொடுத்திருக்கலாமே
அதை யாரால் தடுக்க முடியும் என்று  யாரும் நினைத்து பார்ப்பதில்லை

https://timesofindia.indiatimes.com/business/india-business/banks-
npas-decline-for-first-time-in-seven-years/articleshow/72961638.cms

பிறகு மோடி வங்கிகள் திவாலாக இல்லாமல் இருக்க பல சீர்திருத்த
நடவடிக்கைகளை எடுக்கிறார். அதில் ஒன்று தான் insolvency and
Bankrupt Code என்ற சட்டம்  இயற்றினார் மோடி அதன் விளைவு
2018-19 ல் 1.20 லட்சம் கோடி வசூலாகியுள்ளது

https://economictimes.indiatimes.com/industry/banking/finance/banking/public-
sector-banks-recover-rs-1-2-lakh-cr-from-bad-loans-in-2018-19/articleshow/
69486315.cms

என்ன காரணம் என்று தெரியவில்லை மோடியின் நல்லாட்சிக்கு தொடர்ந்து
உண்மைகளை மறைத்து பொய்யையே பரப்புகிறார்கள்!

நல்லதை பாராட்ட வேண்டும் தவறை சுட்டிக்காட்ட வேண்டும்.
அதுதான் விமர்சனம் பெரும்பாலும் இந்தியாவில் இப்போது இல்லாது
போய்விட்டது

வங்கிகள் திவாலாகாமல் காப்பாற்றிய பெருமை மோடி அரசையே
சாரும் ...

மானியமில்லா சிலிண்டர் விலை ரூ.192 குறைப்பு - சென்னையில் ஒரு சிலிண்டர் விலை ரூ.569.50...



மானியமில்லா சிலிண்டர் விலை ரூ.192 குறைப்பு - சென்னையில் ஒரு சிலிண்டர் விலை ரூ.569.50...

தமிழகத்தில் மே மாதத்திற்கான மானியமில்லாத வீட்டு சமையல் எரிவாயு விலை குறித்த அறிவிப்பு இன்று வெளியானது. இதன்படி, மானியமில்லாத ஒரு சிலிண்டர் விலை, 192 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. மானியமில்லா எரிவாயு சிலிண்டர் விலை ஒன்றுக்கு 569.50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டெல்லியில் 744 ரூபாயில் இருந்து 581.50 ரூபாயாக குறைந்துள்ளது. மும்பையில் 714.50 ரூபாயில் இருந்து 579 ரூபாய்க்கு மானியமில்லா எரிவாயு சிலிண்டர் விற்கப்படுகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சரிவடைந்ததையடுத்து, இந்த விலைக்குறைப்பு நடவடிக்கையை எண்ணெய் நிறுவனங்கள் எடுத்துள்ளன.

Suggestion for India Government to earn Rs. One Crore Crore. Rs.10,00,00,00,00,00,000/- Suggestion to create Indian Government Rupee Crypto Currency.

Dear Sri Our Honourable Prime Minister Sri Narendra Modi Ji, Namasthe. I am Financial Scientist. Suggestion for India Government t...